அகரத்தின் முதலும் நீ ஆர்வத்தின் முடிவும் நீ இயற்கையின் பொருளும் நீ ஈசனின் நேசமும் நீ
உயிருக்குள் சுவாசமும் நீ ஊழ்வினையின் பாடமும் நீ எட்டாத பாவமும் நீ ஏகம்பனின் அருளும் நீ
ஐந்து வேதங்களின் பிறப்பிடம் நீ ஒன்றிப்பின் தனித்துவம் நீ ஓம்காரத்தில் ஒளியும் நீ ஔதாரியத்தின் உயரம் நீ
சர்வ உயிரையும் காக்கும் ஜோதியின் அருள் நம் உள்ளத்தில் வசிக்கும் மிகுந்த மெய்ப்பொருள்
நினைவில் உன்னையே பூஜிக்க வேண்டும் அறிவை உன்னை சுற்றி வளர்க்க வேண்டும்
பார்வைகள் உன்னை எங்கெங்கும் காண வேண்டும் உயிர் மூச்சாக உன்னையே சுவாசிக்க வேண்டும்
வார்த்தைகள் உன்னையே போற்ற வேண்டும் சர்வ ஸ்வரங்களில் உன்னை ரசிக்க வேண்டும்
பக்தியில் உன் சர்வத்தை அறிய வேண்டும் அன்பின் உச்சியில் உன்னை உணர வேண்டும்
உன் சேவை பசியில் மனம் துடிக்க வேண்டும் அதற்க்காகவே பல முறை பிறக்க வேண்டும்
ஒவ்வொரு நடை உன்னுடனேயே நடக்க வேண்டும் உன் பாதையில் எப்பொழுதும் செல்ல வேண்டும்
உச்சியிலிருந்து உள்ளம் வரை உனக்கே அர்ப்பணம் சர்வமய சம்பூரண சமர்ப்பணம்
பிறவியின் அருள் பந்தம் காண்பதற்கு கர்மாவின் பலததையும் சோதித்துப் பார்ப்போமே வாழ்க்கையின் சத்தியத்தை அறிவதற்கு தரமத்தின் பாதையில் பயணித்து பார்ப்போமே
கல்வியின் தத்துவத்தை காண்பதற்கு அறிவின் ஆழத்தை ரசித்து பார்ப்போமே ப்ரம்மத்தின் ஞானத்தை உணர்வதற்கு கடவுளை ஒரு முறை தான் நேசித்து பார்ப்போமே
அவனை நினைக்காத சிந்தனையில் அறிவு இல்லை
அவனை காணாத கண்களில் ஒளி இல்லை
அவனை எண்ணாத மனதில் தூய்மை இல்லை
அவனை கேட்காத செவியில் ஒலி இல்லை
அவனை பாடாத மொழியில் வார்த்தை இல்லை
அவனை உணராத உடலில் உயிர் இல்லை
அவனை வணங்காத கரங்களில் செயல் இல்லை
அவனை பின்பற்றாத அடிகளில் திசை இல்லை
ராம்ம இல்லாத ஞானம் இல்லை
அவன் இல்லாத இடத்தில என் மூச்சில்லை!
ஒவ்வொரு அடியில் ராம் ராம்
ஒவ்வொரு படியிலும் ராம் ராம்
ஒவ்வொரு நாடியில் ராம் ராம்
ஒவ்வொரு வினாடியில் ராம் ராம்
ஒவ்வொரு சுவாசத்தில் ராம் ராம்
ஒவ்வொரு பாவத்தில் ராம் ராம்
ஒவ்வொரு துடிப்பிலும் ராம் ராம்
உயிரின் பிடிப்பிலும் ராம் ராம்
கடமையை கடனாக காணாதே
சொந்தங்களை சுமையாக சேர்க்காதே
தாய் தந்தையை தடையாக தாண்டாதே
நன்றியை நோயாக நினைக்காதே
பணத்தை பிறந்த பலனாக பார்க்காதே
மண்ணின் மரியாதையை மறக்காதே
யாசித்த யாவையும் யோகியாக யோசிக்காதே
ருணத்தின் ரகசியத்தை ரசிக்காதே
லோகத்தின் லாபங்களை லட்சியமாக்காதே
வஞ்சத்தில் விழுந்தவரை வெறுக்காதே
உன்னுடைய பயணமே வாழ்க்கை ஆனாலும்
வாழ்க்கை தர்மத்தில் வெற்றியை அடையும்
|